🕯️🙏 அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின்
அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் 🙏🕯️

Mr Nadarajah Visvanathapillai - Anthiyetti

🌹 யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், அனைவராலும் அன்புடன் “தம்பி – அண்ணா” என்று அழைக்கப்பட்டவருமாகிய திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்கள் 20.09.2026 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி எய்தினார்.

🪔 அந்தியேட்டிக் கிரியைகள்

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 20.10.2026 செவ்வாய்க்கிழமை காலை Sutton இல் உள்ள அன்னாரின் மகள் இல்லத்தில் நடைபெறும்.

📍 மகள் வீடு:
47 Highfield Road, Sutton, SM1 4JY

🙏 அதனைத் தொடர்ந்து, காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை St Oswald's Church, North Cheam இல் அன்னாரின் ஆத்மா சாந்திக்கான பிரார்த்தனைகளும் மதிய போசன நிகழ்வும் நடைபெறும்.

📍 St Oswald's Church:
47 Brocks Dr, Sutton, SM3 9UW

🌺 தாயகத்தில் வழிபாடும் மதிய போசனமும்

அதேவேளை, எங்கள் தாயகமான வல்வெட்டித்துறை நெடியகாட்டில், கணபதி மஹாலிலும் அன்னாரின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகளும் மதிய போசன நிகழ்வும் நடைபெறவுள்ளன.

🙏 உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊரவர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, எங்கள் தந்தையாரின் ஆத்மா சாந்தியடைய எங்களுடன் இணைந்து பிரார்த்திக்குமாறு அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

அன்னாரின் குடும்பத்தினர்

🎵 அஞ்சலி இசை • ஒலிக்க கிளிக் செய்யவும்